Publications

How the Victoria 2011 A/L Alumni Reunion Came Together

How the Victoria 2011 A/L Alumni Reunion Came Together

விக்ரோறியா 2011 A/L பழைய மாணவர் ஒன்றுகூடல் உருவான கதை

Fifteen years after leaving school in 2011, we reunited on 27 June 2026 as Victoria College marked its 150th anniversary. This is a record of the planning, preparation, delivery, transparent accounts and lessons learned.

இந்த ஒன்றுகூடலுக்கான முதல் எண்ணத்தை விதைத்தவர் திரு இன்பராஜ். கல்லூரியின் 150வது ஆண்டு விழாவும் அந்த எண்ணத்தை நிகழ்வாக மாற்றுவதற்கு முக்கிய உந்துதலாக அமைந்தது. அந்த எண்ணத்தைத் திட்டமாக மாற்றி, ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னெடுத்தவர்கள் திரு இன்பராஜ், திருமதி மாதுரி, திருமதி அஜந்தா, திருமதி அபிராமி, திரு கௌதமன் மற்றும் திரு மணிநேசன். அவர்களுடன் இணைந்த அனைவரின் பங்களிப்பில்தான் இந்த ஒன்றுகூடல் முழுமையான நிகழ்வாக உருவானது.

விக்ரோறியா கல்லூரி 2011 உயர்தர மாணவர் ஒன்றுகூடல் — ஆசிரியர்களுடன் குழுப் புகைப்படம்

2011 உயர்தர மாணவர் ஒன்றுகூடல் — ஆசிரியர்களுடன். நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத சில நண்பர்கள், மூன்றாவது வரிசையில் புகைப்படத் திருத்தம் (Photoshop) மூலம் இணைக்கப்பட்டுள்ளனர்.

Chapter 01

தயாரிப்புப் பணிகள்

ஒன்றுகூடலின் நினைவாகவும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் மூன்று முக்கிய பொருட்களைத் தயாரிக்க முடிவு செய்தோம்: அனைவருக்குமான T-shirt, ஆசிரியர்களுக்கான Memento, பெரிய குழுப் புகைப்படம். அவற்றின் வடிவமைப்பு மற்றும் தேவையான எண்ணிக்கையை முடிவு செய்ய, வார இறுதிகளில் இயன்றவரை அனைவரையும் WhatsApp அழைப்பில் ஒன்றிணைத்து, அவர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டோம். அவற்றின் அடிப்படையிலேயே இறுதி முடிவுகளை எடுத்தோம்.

ஒன்றுகூடல் T-shirt

மெரூன் நிற polo T-shirt — முன்பக்கத்தில் கல்லூரிச் சின்னமும் மஞ்சள் பட்டையும்; பின்பக்கத்தில் கல்லூரி / 2011 உயர்தர மாணவர் ஒன்றியம் பெயரும் இடம்பெற்றன.

நிகழ்ச்சி Banner

ஒன்றுகூடலின் கருப்பொருளையும் கல்லூரியின் 150வது ஆண்டு விழாவையும் இணைத்து, மேடையின் பின்னணியில் பயன்படுத்த மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்ற வாசகத்துடன் நிகழ்ச்சி banner தயாரிக்கப்பட்டது.

2011 உயர்தர மாணவர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி banner — மீண்டும் பள்ளிக்கு போகலாம்

நிகழ்ச்சி banner — மீண்டும் பள்ளிக்கு போகலாம் · 150 ஆண்டு விழா

ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் Memento

பனை மரம், கல்லூரிச் சின்னம், எழுதுகோல் தாங்கி ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்ட நினைவுப்பரிசில், ஒவ்வொருவருக்கும் பொருத்தமான நன்றிச் செய்தியைப் பொறித்தோம்.

Though years have passed, your lessons remain with us forever.

ஆசிரியர்களுக்கான செய்தி · 2011 Students’ Union, JVC

Thank you for your inspiring leadership, unwavering dedication, and invaluable guidance throughout our school journey.

முன்னாள் அதிபர்களுக்கான செய்தி

Thank you for joining us. Your inspiring presence added great value to our gathering.

தற்போதைய அதிபருக்கான செய்தி

2011 உயர்தர மாணவர் ஒன்றியம் — பனை மர வேலைப்பாட்டு நினைவுப்பரிசு
பனை மரம் · கல்லூரிச் சின்னம் · எழுதுகோல் தாங்கி

பெரிய அளவில் அச்சிடப்பட்ட குழுப் புகைப்படம்

ஒன்றுகூடலின் நினைவாக, குழுப் புகைப்படத்தைத் தரமான முறையில் பெரிய அளவில் அச்சிட்டு, சட்டகம் இன்றி அனைத்து பழைய மாணவர்களுக்கும் வழங்கினோம்.

2011 உயர்தர மாணவர் ஒன்றுகூடலின் பெரிய குழுப் புகைப்படம்
பெரிய குழுப் புகைப்படம்

Chapter 02

மண்டப ஏற்பாடுகள்

அடுத்து மண்டபத்தைத் தயார் செய்தோம். மேடைக்கு வெள்ளைத் திரை அமைத்து, மலர் மாலைகளால் அலங்கரித்தோம். மேசைகள், கதிரைகள், நிறைகுடம் மற்றும் குத்துவிளக்கை உரிய இடங்களில் வைத்தோம். நாங்கள் தயாரித்த banner-ஐ மேடையின் பின்னால் பொருத்தினோம்.

பழைய நினைவுகளைத் தொகுத்த காணொளியை ஒளிபரப்ப, கல்லூரியின் Projector மற்றும் திரையைப் பயன்படுத்தத் திட்டமிட்டோம்.

ஒன்றுகூடல் Hall — மேடை மற்றும் அலங்காரம்
மேடை அமைப்பு
நிறைகுடம் மற்றும் குத்துவிளக்கு அமைப்பு
நிறைகுடம் · குத்துவிளக்கு
கல்லூரி மண்டபத்தில் Projector மூலம் பழைய நினைவுக் காணொளியைப் பார்க்கும் 2011 உயர்தரப் பழைய மாணவர்கள்
Projector மூலம் நினைவுக் காணொளி ஒளிபரப்பப்பட்ட தருணம்

Chapter 03

உணவு ஏற்பாடுகள்

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிற்றுண்டியாக Veg rolls, Veg cake மற்றும் சர்பத் வழங்கினோம். மதிய விருந்துக்காக சுயபரிமாறல் முறையில் கறிகள், சோறு, பக்க உணவுகள், அப்பளம், வடை ஆகியவற்றை ஏற்பாடு செய்தோம்.

கருத்துக்கணிப்பில் மதிய உணவின் சுவை சராசரி 4.50 / 5.

Chapter 04

நிகழ்ச்சிநாள் நிரல்

முன்தயாரிப்புகள் முடிந்த நிலையில், காலை 9:00 முதல் மதிய உணவு மற்றும் படக்காட்சி வரை நிகழ்ச்சிகளை நேர அட்டவணைப்படி நிறைவேற்றினோம். முறையான நிகழ்ச்சிகள் முடிந்தபின், சிறிது நேரம் 2011 உயர்தர மாணவர் குழுவாக விளையாட்டுகளிலும் ஈடுபட்டோம்.

முழு நேர அட்டவணையைப் பார்க்க · 9:00 – 1:00
நேரம்நிகழ்ச்சிவிவரம்
9:00 – 9:30ஆசிரியர்கள் வரவேற்புவரும் ஆசிரியர்களை வாசலில் வரவேற்று Staff Room-ல் வைத்திருத்தல்
9:30 – 9:35மாலையிட்டு வரவேற்றல்நடராஜர் மண்டபத்தில் வழிபட்டு, ஆசிரியர்களை மாலையிட்டு எமது மண்டபத்திற்கு வரவேற்றல்
9:35 – 9:45குத்து விளக்கேற்றல்அதிபர்கள் குத்துவிளக்கேற்றல்
9:40 – 9:42தமிழ்த்தாய் வாழ்த்துதிருமதி மாதுரி & குழுவினர்
9:42 – 9:45கல்லூரி கீதம்அனைவரும்
9:45 – 9:55வரவேற்புரைதிருமதி அபிராமி
—உணவு வழங்கல் (Short Eats)அனைவருக்கும்
9:55 – 10:15முன்னாள் அதிபரின் சிறப்புரைதிருமதி வேலுப்பிள்ளை
10:15 – 10:30முன்னாள் அதிபரின் நினைவுப் பகிர்வுதிரு ஶ்ரீஸ்காந்தன்
10:30 – 11:00பழைய மாணவர்களின் நினைவுப் பகிர்வு2011 உயர்தரப் பழைய மாணவர்கள்
11:00 – 11:30ஆசிரியர்களின் நினைவுப் பகிர்வுஆசிரியர்களின் உரை
11:30 – 11:45குழுப் புகைப்படம்ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களுடன் குழுப் புகைப்படம்
—கல்லூரி அபிவிருத்தி நிதிக்காக காசோலை கையளிப்புகுழுப் புகைப்படத்தைத் தொடர்ந்து காசோலை வழங்கல்
11:45 – 12:00புதிய அதிபரின் உரைதற்போதைய அதிபரின் உரை
12:00 – 12:15ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கல்நினைவுப் பரிசுகள் வழங்குதல் — Memento
12:15 – 12:30நன்றியுரைதிரு கெளதமன்
12:30 – 1:00மதிய உணவு—
—SlideshowProjector-ல் வீடியோ
1:00 முதல்உள்ளக விளையாட்டுகள்பழைய மாணவர்கள் எங்களுக்குள் இணைந்து விளையாடுதல்

Chapter 05

வரவு செலவு அறிக்கை

நிகழ்வு நிறைவடைந்ததும், பங்களிப்புகள், செலவுகள், மீதி ஆகிய அனைத்தையும் வெளிப்படையாகப் பதிவு செய்தோம். தொகைகள் LKR.

  • மொத்த வரவு346,900
  • மொத்த செலவு261,896
  • மிகுதி85,004
வரவு விபரம்
விபரம்தொகை
Science Total151,000.00
Commerce Total117,500.00
Arts Total74,000.00
Additional Income From Mementos4,400.00
மொத்தம்346,900.00
செலவு விபரம்
விபரம்தொகை
T-Shirts72,200.00
Memento55,000.00
Lunch39,000.00
Digital Prints (Banner + காசோலை + 26 Photo Frames)24,770.00
Paper plates + Cups1,570.00
சர்பத்5,020.00
Cake6,000.00
நிறைகுடம் things690.00
3 cases of water bottles + சந்தனம்/குங்குமம்4,336.00
15 சந்தன மாலைகள்6,000.00
மல்லி மாலைகள்500.00
Memento Bags450.00
Short Eats (Rolls)3,600.00
Decoration17,000.00
Niji Cloth (Decoration)1,500.00
Refreshments (27/06/2026)560.00
Photography8,000.00
Ice Cubes1,000.00
Refreshments (26/06/2026)2,500.00
Balloon, Paper Cups and Scissor1,000.00
Prints, Duct Tape and 2 small Soda1,200.00
School Magazine Advertisement10,000.00
மொத்தம்261,896.00

Chapter 06

மீளாய்வு / Retrospective

திட்டமிடல் மற்றும் நிகழ்வு நிறைவேற்றத்தில் எது சிறப்பாகச் செயல்பட்டது, எதை மேம்படுத்தலாம் என்பதை அறிய, நிகழ்ச்சிக்குப் பின் Google Form மூலம் சுருக்கமான கருத்துக்கணிப்பை நடத்தினோம் — 14 பதில்கள்.

  • 5.00ஒட்டுமொத்த திருப்தி · 14 பதில்கள்
  • 4.50மதிய உணவு சுவை
  • 100%மீண்டும் பங்கேற்க விருப்பம்
  • 64%ஏற்பாட்டுக் குழுவில் சேரத் தயார்
நேரில் கலந்துகொண்டீர்களா?
92.9%
  • ஆம் · 13
  • இல்லை · 1
மீண்டும் பங்கேற்க விரும்புகிறீர்களா?
100%
  • ஆம் · 14
  • இல்லை · 0
ஏற்பாட்டுக் குழுவில் சேர விரும்புகிறீர்களா?
64.3%
  • ஆம் · 9
  • இல்லை · 5

ஒட்டுமொத்த திருப்தி சராசரி 5.00 / 5

மதிய உணவின் சுவை சராசரி 4.50 / 5

அடுத்த ஒன்றுகூடல் — விரும்பும் இடைவெளி
  • 5 ஆண்டுகள்6 · 42.9%
  • 1 ஆண்டு2 · 14.3%
  • ஆண்டுதோறும்2 · 14.3%
  • 1–2 ஆண்டுகள்1 · 7.1%
  • 3 ஆண்டுகள்1 · 7.1%
  • குறைந்தது 2 ஆண்டுகள்1 · 7.1%
  • 10 ஆண்டுகள்1 · 7.1%
மிகவும் பிடித்த பகுதி
  • ஒழுங்கமைப்பு
  • Games
  • Gaming and speech
  • SELF INTRODUCTION
  • எல்லோரது ஆரம்ப கால கல்வி வாழ்க்கை முறை மற்றும் தற்போதைய நிலை தொடர்பான அனுபவப் பகிர்வு
  • Entier events
  • Experience sharing (both) and entertainment
  • All
  • Shared memories by old students
  • எல்லாப் பகுதியுமா
  • Games
மேம்படுத்த வேண்டியவை
  • வருடாந்தம் நடாத்தவும்
  • ஏனைய நண்பர்களும் இணைந்து கொண்டால் இன்னும் சிறப்பு
  • Participater numbers
  • Timing
  • நேர முகாமைத்துவம்
  • All good
  • More members should be participate
  • Selection of location (hall)
  • பங்குபற்றுனர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்
  • Better online streaming to other colleagues outside

மூலம்: Google Form responses · 14 பதில்கள்

இந்த மீளாய்வில் கிடைத்த கருத்துகள், அடுத்த ஒன்றுகூடலை இன்னும் உள்ளடக்கமாகவும் நேர்த்தியாகவும் திட்டமிட உதவும் கற்றல்களாகப் பதிவு செய்யப்பட்டன.