
விக்ரோறியா 2011 A/L பழைய மாணவர் ஒன்றுகூடல் உருவான கதை
How the Victoria 2011 A/L Alumni Reunion Came Together
2011 ஆம் ஆண்டு பாடசாலையை விட்டு வெளியேறிய நாம், 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2026 ஜூன் 27 அன்று, சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவுடன் இணைந்து ஒன்றுகூடினோம். அதன் திட்டமிடல், தயாரிப்பு, நிகழ்வு நிறைவேற்றம், வெளிப்படையான வரவு செலவு மற்றும் கற்றுக்கொண்ட பாடங்களின் பதிவு இது.
இந்த ஒன்றுகூடலுக்கான முதல் எண்ணத்தை விதைத்தவர் திரு இன்பராஜ். கல்லூரியின் 150வது ஆண்டு விழாவும் அந்த எண்ணத்தை நிகழ்வாக மாற்றுவதற்கு முக்கிய உந்துதலாக அமைந்தது. அந்த எண்ணத்தைத் திட்டமாக மாற்றி, ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னெடுத்தவர்கள் திரு இன்பராஜ், திருமதி மாதுரி, திருமதி அஜந்தா, திருமதி அபிராமி, திரு கௌதமன் மற்றும் திரு மணிநேசன். அவர்களுடன் இணைந்த அனைவரின் பங்களிப்பில்தான் இந்த ஒன்றுகூடல் முழுமையான நிகழ்வாக உருவானது.

2011 உயர்தர மாணவர் ஒன்றுகூடல் — ஆசிரியர்களுடன். நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத சில நண்பர்கள், மூன்றாவது வரிசையில் புகைப்படத் திருத்தம் (Photoshop) மூலம் இணைக்கப்பட்டுள்ளனர்.
Chapter 01
தயாரிப்புப் பணிகள்
ஒன்றுகூடலின் நினைவாகவும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் மூன்று முக்கிய பொருட்களைத் தயாரிக்க முடிவு செய்தோம்: அனைவருக்குமான T-shirt, ஆசிரியர்களுக்கான Memento, பெரிய குழுப் புகைப்படம். அவற்றின் வடிவமைப்பு மற்றும் தேவையான எண்ணிக்கையை முடிவு செய்ய, வார இறுதிகளில் இயன்றவரை அனைவரையும் WhatsApp அழைப்பில் ஒன்றிணைத்து, அவர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டோம். அவற்றின் அடிப்படையிலேயே இறுதி முடிவுகளை எடுத்தோம்.
ஒன்றுகூடல் T-shirt
மெரூன் நிற polo T-shirt — முன்பக்கத்தில் கல்லூரிச் சின்னமும் மஞ்சள் பட்டையும்; பின்பக்கத்தில் கல்லூரி / 2011 உயர்தர மாணவர் ஒன்றியம் பெயரும் இடம்பெற்றன.
1 / 3
நிகழ்ச்சி Banner
ஒன்றுகூடலின் கருப்பொருளையும் கல்லூரியின் 150வது ஆண்டு விழாவையும் இணைத்து, மேடையின் பின்னணியில் பயன்படுத்த மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்ற வாசகத்துடன் நிகழ்ச்சி banner தயாரிக்கப்பட்டது.

நிகழ்ச்சி banner — மீண்டும் பள்ளிக்கு போகலாம் · 150 ஆண்டு விழா
ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் Memento
பனை மரம், கல்லூரிச் சின்னம், எழுதுகோல் தாங்கி ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்ட நினைவுப்பரிசில், ஒவ்வொருவருக்கும் பொருத்தமான நன்றிச் செய்தியைப் பொறித்தோம்.
Though years have passed, your lessons remain with us forever.
Thank you for your inspiring leadership, unwavering dedication, and invaluable guidance throughout our school journey.
Thank you for joining us. Your inspiring presence added great value to our gathering.

பெரிய அளவில் அச்சிடப்பட்ட குழுப் புகைப்படம்
ஒன்றுகூடலின் நினைவாக, குழுப் புகைப்படத்தைத் தரமான முறையில் பெரிய அளவில் அச்சிட்டு, சட்டகம் இன்றி அனைத்து பழைய மாணவர்களுக்கும் வழங்கினோம்.

Chapter 02
மண்டப ஏற்பாடுகள்
அடுத்து மண்டபத்தைத் தயார் செய்தோம். மேடைக்கு வெள்ளைத் திரை அமைத்து, மலர் மாலைகளால் அலங்கரித்தோம். மேசைகள், கதிரைகள், நிறைகுடம் மற்றும் குத்துவிளக்கை உரிய இடங்களில் வைத்தோம். நாங்கள் தயாரித்த banner-ஐ மேடையின் பின்னால் பொருத்தினோம்.
பழைய நினைவுகளைத் தொகுத்த காணொளியை ஒளிபரப்ப, கல்லூரியின் Projector மற்றும் திரையைப் பயன்படுத்தத் திட்டமிட்டோம்.



Chapter 03
உணவு ஏற்பாடுகள்
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிற்றுண்டியாக Veg rolls, Veg cake மற்றும் சர்பத் வழங்கினோம். மதிய விருந்துக்காக சுயபரிமாறல் முறையில் கறிகள், சோறு, பக்க உணவுகள், அப்பளம், வடை ஆகியவற்றை ஏற்பாடு செய்தோம்.
1 / 11
கருத்துக்கணிப்பில் மதிய உணவின் சுவை சராசரி 4.50 / 5.
Chapter 04
நிகழ்ச்சிநாள் நிரல்
முன்தயாரிப்புகள் முடிந்த நிலையில், காலை 9:00 முதல் மதிய உணவு மற்றும் படக்காட்சி வரை நிகழ்ச்சிகளை நேர அட்டவணைப்படி நிறைவேற்றினோம். முறையான நிகழ்ச்சிகள் முடிந்தபின், சிறிது நேரம் 2011 உயர்தர மாணவர் குழுவாக விளையாட்டுகளிலும் ஈடுபட்டோம்.
முழு நேர அட்டவணையைப் பார்க்க · 9:00 – 1:00
| நேரம் | நிகழ்ச்சி | விவரம் |
|---|---|---|
| 9:00 – 9:30 | ஆசிரியர்கள் வரவேற்பு | வரும் ஆசிரியர்களை வாசலில் வரவேற்று Staff Room-ல் வைத்திருத்தல் |
| 9:30 – 9:35 | மாலையிட்டு வரவேற்றல் | நடராஜர் மண்டபத்தில் வழிபட்டு, ஆசிரியர்களை மாலையிட்டு எமது மண்டபத்திற்கு வரவேற்றல் |
| 9:35 – 9:45 | குத்து விளக்கேற்றல் | அதிபர்கள் குத்துவிளக்கேற்றல் |
| 9:40 – 9:42 | தமிழ்த்தாய் வாழ்த்து | திருமதி மாதுரி & குழுவினர் |
| 9:42 – 9:45 | கல்லூரி கீதம் | அனைவரும் |
| 9:45 – 9:55 | வரவேற்புரை | திருமதி அபிராமி |
| — | உணவு வழங்கல் (Short Eats) | அனைவருக்கும் |
| 9:55 – 10:15 | முன்னாள் அதிபரின் சிறப்புரை | திருமதி வேலுப்பிள்ளை |
| 10:15 – 10:30 | முன்னாள் அதிபரின் நினைவுப் பகிர்வு | திரு ஶ்ரீஸ்காந்தன் |
| 10:30 – 11:00 | பழைய மாணவர்களின் நினைவுப் பகிர்வு | 2011 உயர்தரப் பழைய மாணவர்கள் |
| 11:00 – 11:30 | ஆசிரியர்களின் நினைவுப் பகிர்வு | ஆசிரியர்களின் உரை |
| 11:30 – 11:45 | குழுப் புகைப்படம் | ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களுடன் குழுப் புகைப்படம் |
| — | கல்லூரி அபிவிருத்தி நிதிக்காக காசோலை கையளிப்பு | குழுப் புகைப்படத்தைத் தொடர்ந்து காசோலை வழங்கல் |
| 11:45 – 12:00 | புதிய அதிபரின் உரை | தற்போதைய அதிபரின் உரை |
| 12:00 – 12:15 | ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கல் | நினைவுப் பரிசுகள் வழங்குதல் — Memento |
| 12:15 – 12:30 | நன்றியுரை | திரு கெளதமன் |
| 12:30 – 1:00 | மதிய உணவு | — |
| — | Slideshow | Projector-ல் வீடியோ |
| 1:00 முதல் | உள்ளக விளையாட்டுகள் | பழைய மாணவர்கள் எங்களுக்குள் இணைந்து விளையாடுதல் |
Chapter 05
வரவு செலவு அறிக்கை
நிகழ்வு நிறைவடைந்ததும், பங்களிப்புகள், செலவுகள், மீதி ஆகிய அனைத்தையும் வெளிப்படையாகப் பதிவு செய்தோம். தொகைகள் LKR.
- மொத்த வரவு346,900
- மொத்த செலவு261,896
- மிகுதி85,004
வரவு விபரம்
| விபரம் | தொகை |
|---|---|
| Science Total | 151,000.00 |
| Commerce Total | 117,500.00 |
| Arts Total | 74,000.00 |
| Additional Income From Mementos | 4,400.00 |
| மொத்தம் | 346,900.00 |
செலவு விபரம்
| விபரம் | தொகை |
|---|---|
| T-Shirts | 72,200.00 |
| Memento | 55,000.00 |
| Lunch | 39,000.00 |
| Digital Prints (Banner + காசோலை + 26 Photo Frames) | 24,770.00 |
| Paper plates + Cups | 1,570.00 |
| சர்பத் | 5,020.00 |
| Cake | 6,000.00 |
| நிறைகுடம் things | 690.00 |
| 3 cases of water bottles + சந்தனம்/குங்குமம் | 4,336.00 |
| 15 சந்தன மாலைகள் | 6,000.00 |
| மல்லி மாலைகள் | 500.00 |
| Memento Bags | 450.00 |
| Short Eats (Rolls) | 3,600.00 |
| Decoration | 17,000.00 |
| Niji Cloth (Decoration) | 1,500.00 |
| Refreshments (27/06/2026) | 560.00 |
| Photography | 8,000.00 |
| Ice Cubes | 1,000.00 |
| Refreshments (26/06/2026) | 2,500.00 |
| Balloon, Paper Cups and Scissor | 1,000.00 |
| Prints, Duct Tape and 2 small Soda | 1,200.00 |
| School Magazine Advertisement | 10,000.00 |
| மொத்தம் | 261,896.00 |
Chapter 06
மீளாய்வு / Retrospective
திட்டமிடல் மற்றும் நிகழ்வு நிறைவேற்றத்தில் எது சிறப்பாகச் செயல்பட்டது, எதை மேம்படுத்தலாம் என்பதை அறிய, நிகழ்ச்சிக்குப் பின் Google Form மூலம் சுருக்கமான கருத்துக்கணிப்பை நடத்தினோம் — 14 பதில்கள்.
- 5.00ஒட்டுமொத்த திருப்தி · 14 பதில்கள்
- 4.50மதிய உணவு சுவை
- 100%மீண்டும் பங்கேற்க விருப்பம்
- 64%ஏற்பாட்டுக் குழுவில் சேரத் தயார்
- ஆம் · 13
- இல்லை · 1
- ஆம் · 14
- இல்லை · 0
- ஆம் · 9
- இல்லை · 5
ஒட்டுமொத்த திருப்தி சராசரி 5.00 / 5
மதிய உணவின் சுவை சராசரி 4.50 / 5
- ஒழுங்கமைப்பு
- Games
- Gaming and speech
- SELF INTRODUCTION
- எல்லோரது ஆரம்ப கால கல்வி வாழ்க்கை முறை மற்றும் தற்போதைய நிலை தொடர்பான அனுபவப் பகிர்வு
- Entier events
- Experience sharing (both) and entertainment
- All
- Shared memories by old students
- எல்லாப் பகுதியுமா
- Games
- வருடாந்தம் நடாத்தவும்
- ஏனைய நண்பர்களும் இணைந்து கொண்டால் இன்னும் சிறப்பு
- Participater numbers
- Timing
- நேர முகாமைத்துவம்
- All good
- More members should be participate
- Selection of location (hall)
- பங்குபற்றுனர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்
- Better online streaming to other colleagues outside
மூலம்: Google Form responses · 14 பதில்கள்
இந்த மீளாய்வில் கிடைத்த கருத்துகள், அடுத்த ஒன்றுகூடலை இன்னும் உள்ளடக்கமாகவும் நேர்த்தியாகவும் திட்டமிட உதவும் கற்றல்களாகப் பதிவு செய்யப்பட்டன.















